நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுவதுடன், இன்று மழையுடனான வானிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதில் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஏனைய பிராந்தியங்களில் சில இடங்களில் 75 mm வரையில் ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.மழையுடன் கூடிய வேளைகளில் பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், மின்னல் பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
