வாகன இறக்குமதி தொடர்பில் சற்று முன் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

 

2026 ஜனவரி மாதத்தில் தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகனங்கள் உட்பட வாகன இறக்குமதிகள், 2025 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் தகவலின்படி, 2025 டிசம்பரில் அமெரிக்க டொலர் 301 மில்லியன் அளவில் இருந்த வாகன இறக்குமதிகள், 2026 ஜனவரியில் 224 மில்லியன் டொலராக குறைந்துள்ளன. 2026 ஜனவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை, கடந்த ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் உயர்வைப் பதிவு செய்ததுடன், 2025 ஆம் ஆண்டில் பதிவான மாதாந்திர மட்டத்தையும் மீறியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, 2026 ஜனவரியில் சுற்றுலா வருமானம் 378 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் பணமாற்றுகள் (Workers’ Remittances) 2026 ஜனவரியில் 751 மில்லியன் அமெரிக்க டொலர் ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 31.1 சதவீத உயர்வை குறிக்கிறது. 2026 ஜனவரியில் அரசுப் பத்திர சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் 17 மில்லியன் அமெரிக்க டொலர் நிகர வரவாக பதிவாகியுள்ளன. இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE), முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை பரிவர்த்தனைகள் உட்பட வெளிநாட்டு முதலீடுகள் 22 மில்லியன் அமெரிக்க டொலர் நிகர வெளியேற்றமாக பதிவாகியுள்ளன. 2026 ஜனவரி மாத இறுதியில், சீன மக்கள் வங்கியுடன் (PBOC) கொண்டுள்ள பரிமாற்ற வசதி (Swap Facility) உட்பட, இலங்கையின் மொத்த அதிகாரபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post