அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (02) காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கம் பூமிக்குள் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்தியாவின் காஷ்மீரில் 4.6 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
