யாழில் ஏழு மாதப் பெண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவமானது நேற்றையதினம்(17.2.2026)இடம்பெற்றுள்ளது. இருதயம் மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட கடுமையான நோய் பாதிப்பு காரணமாக இந்தக்குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் - நுணாவில் பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இந்தக் குழந்தை பிறந்தது முதல் இருதய நோய் மற்றும் நுரையீரல் தொடர்பான பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்துள்ளது. இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. எனினும், மேலதிக சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் நேற்று அக்குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் மரணம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
