இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகர் பகுதியில் அமைந்துள்ள உடற்பிடிப்பு (Spa) மையம் ஒன்றில், காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையின் போது ஜன்னல் வழியாக வெளியே குதித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த உடற்பிடிப்பு மையத்தில் சட்டவிரோத பாலியல் தொழில் நடைபெறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, அங்கு சோதனை முன்னெடுக்கப்பட்டது.
மாடியின் ஜன்னல் வழியாக குதித்த பெண்ணும் முகாமையாளரும்
இதன்போது பொலிஸார் அங்கிருந்த அறைகளைப் பரிசோதித்த போது, ஒரு அறையில் இரண்டு பெண்களும் Spa முகாமையாளரும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் பொலிசாரை கண்டதும் தப்பியோடும் நோக்கத்தில், ஒரு பெண்ணும் முகாமையாளரும் முதலாவது மாடியின் ஜன்னல் வழியாக வெளியே குதித்துள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் முகாமையாளர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அங்கிருந்த மேலும் நான்கு பெண்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். சட்டவிரோத ஆள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடற்பிடிப்பு மைய உரிமையாளருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன
