விவாகரத்துக்கு காரணம் நடிகை? விஜய் தொடர்பில் சங்கீதா கூறிய தகவல்

 

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சங்கீதா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் விஜய்யின் மனைவி சங்கீதா குறிப்பிட்டுள்ளதாவது, நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவை விஜய் கொண்டிருந்தார் . இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். நடிகை ஒருவருடன் உறவை முறித்துக் கொள்வதாக முதலில் கூறியும், நடவடிக்கையில் மாற்றமில்லை. இவ்விடயம் தொடர்பில் கேட்டதால், வீட்டில் தனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டதாகவும், கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தியதாகவும் சங்கீதா குறிப்பிட்டுள்ளார். நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அந்த நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆதராங்களை தான் வெளியிடுவதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார். அதேவேளை விஜய் இன் மனைவி சங்கீதா யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட லண்டன் வாழ் புலம் பெயர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post