Type Here to Get Search Results !

சூரிய கிரகணத்தின் போது நடக்கும் சந்திர பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்கார்கள்

சூரிய கிரகணம் என்பது ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகும். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17 அன்று நிகழப்போகிறது. 

முதல் சூரிய கிரகணம் என்பதால், ஜோதிடத்தின் படி இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.இந்த நாளில் நடக்கும் சந்திரனின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் சந்திரன் இரண்டு முறை பெயர்ச்சி அடைகிறது. இந்த சந்திர பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என நாம் இங்கு பார்ப்போம். 

மேஷம்

இந்த கிரகண நாளில் நடக்கும் சந்திரனின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களை அளிக்கப்போகிறது.

 அதுமட்டுமல்லாமல், இந்த நேரத்தில் அவர்கள் நிறைய மனரீதியான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆரோக்கியரீதியாக அவர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, நிதி நிலையும் பெரும்பாலும் எதிர்பார்த்ததை விட மோசமாக மாறும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இந்த சந்திர பெயர்ச்சியால் எதிர்மறையான விளைவுகளை அனுபவிக்கப் போகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். பல கோணங்களில் இருந்து மன அழுத்தம் வரும். பெரும்பாலும், வேலை தொடர்பான பிரச்சினைகள் அவர்களின் மன அமைதியை சீர்குலைக்கும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும், இது அவர்களின் சேமிப்பை பதம் பார்க்கும். தேவையற்ற கவலைகள் பல வழிகளில் உங்களைத் தொந்தரவு செய்யும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திரனின் இந்த பெயர்ச்சி மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது அவர்களுக்கு சோதனையான காலமாக இருக்கும். அதைத் தவிர, இது பல வழிகளில் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. எந்தவொரு முடிவுவையும் எடுப்பதற்கு முன் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தேவையற்ற விளைவுகளைத் தடுக்க பணிவான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad