கேரள துணை ஆணையர் மெரின் ஜோசப் ஐபிஎஸ் மற்றும் அவரது குழுவினர் 13 வயது சிறுமி பா*லியல் வன்கொ*டுமை வழக்கில் கேரளாவில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை சவுதி அரேபியாவின் ரியாத்தில் வைத்து கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட சுனில் குமார் பத்ரன் வயது.38. இவர் சவுதியில் கட்டுமானத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்தியாவுக்கு விடுமுறையில் மட்டுமே வந்திருந்த நேரத்தில் தனது குடும்ப நண்பரின் 13 வயது சிறுமியை ஒருநாள் பா*லியல் வ*ன்கொ*டுமை செய்துள்ளார்.
இந்த வழக்கில் போலீசார் தன்னை பிடித்து விடக்கூடாது என்பதற்காக சுனில் சவுதி அரேபியா தப்பி ஓடிவிட்டார்.
ஆனால், பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவத்தை குடும்பத்தினரிடமும் காவல்துறையினரிடமும் புகார் செய்த சிறிது நேரத்திலேயே, சுனில் சவுதிக்கு தப்பிச் சென்றார்.
அவமானம் தாங்காமல் அந்த பெண்ணும் குற்றம் சாட்டப்பட்டவர் சவுதிக்கு தப்பிச் சென்ற சிறிது நேரத்திலேயே, சுனிலை முதலில் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்திய அவரது மாமாவும் த*ற்கொ*லை செய்து கொண்டனர்.
இந்த துயர சம்பவம் அந்தப் பெண்ணின் முழு குடும்பத்தையும் உடைத்தது. இன்டர்போல் 2017 இல் பத்ரனுக்கு நோட்டீஸ் அனுப்பிய போதிலும், பெரிதாக எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கை கையாண்ட மெரின் ஜோசப் என்ற பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் விடாமுயற்சியும் உறுதியும் இந்த வழக்கை விரைவாக முன்னெடுத்தது.
இந்நிலையில் குற்றவாளி சுனிலை கைது செய்வதற்காக மெரினும் அவரது குழுவினரும் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் தரையிறங்கினர்.
மேலும், இன்டர்போலின் உதவியுடன் சுனிலை கைது செய்து கேரளாவுக்கு அழைத்து வந்தனர்.
குற்றவாளி வெளிநாடு தப்பிச் சென்றாலும், அவர் இந்தியா வரும் வரை காத்திருக்காமல், அவரை உடனடியாக கைது செய்தே ஆக வேண்டும் என உறுதி எடுத்து தானே களத்தில் இறங்கினார் மெரின் ஜோசப் ஐ.பி.எஸ்
இந்த விசாரணையை செயல்படுத்துவதில் மெரினின் தைரியத்தையும் உறுதியையும் சமூக ஊடகங்கள் முழுவதும் பலர் பாராட்டி வருகின்றனர். மேலும், சில நெட்டிசன்கள் அவரை 'ரியல் சிங்கம்' என்று அழைப்பதில் ஆச்சரியமில்லை என்று பாராட்டினர்..
இவர் போன்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் நமது நாட்டின் பெருமை. கேரள அரசு இந்த பெண் அதிகாரிக்கு பாராட்டும் விருதும் வழங்கி கௌரவிக்க வேண்டும்.
இது பற்றிய உங்க கருத்து என்ன?
