இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று (24) ஒரே நாளில் மூன்று தடவைகள் அதிரடியாக அதிகரித்துள்ளது.
இதன்படி, இன்று ஒரு நாளில் மாத்திரம் இதுவரை 20,000 ரூபாயால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று காலை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 365,000 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், முதல் கட்டமாக 370,000 ரூபாயாகவும், பின்னர் 375,000 ரூபாயாகவும் அதிகரித்தது
இந்நிலையில், தற்போது மீண்டும் 10,000 ரூபாயால் உயர்ந்து ஒரு பவுண் தங்கம் 385,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய தங்க விலை
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 385,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 354,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,275 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் தளம்பல் நிலை மற்றும் உள்நாட்டில் தங்கத்திற்கான கேள்வி மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளமையே வரலாறு காணாத விலை உயர்வுக்குக் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
