சவுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.சவுதி அரேபிய அதிகாரிகள், ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் வழங்கும் உத்தியோகபூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், கடவுச்சீட்டு மற்றும் வதிவிட அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்கள் செல்லுபடியாவதை உறுதி செய்து, அவற்றை எளிதில் அணுகக்கூடிய வகையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பும் நலனுமே தூதரகத்தின் முதன்மையான இலக்காகும். அவசர தொடர்புகளுக்கு (24 மணிநேர சேவை): தொலைபேசி எண்கள்: +966 54 947 7567, +966 56 982 2700 WhatsApp / IMO (தகவல்களுக்கு மட்டும்): +966 56 975 3380 மின்னஞ்சல்: slemb.riyadh@mfa.gov.lk மேலதிக தகவல்களுக்குத் தூதரகத்தின் இணையதளம், Facebook, Instagram, X மற்றும் தூதரகத்தின் WhatsApp ஆகிய சமூக ஊடகங்களை பின்தொடருமாறு ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.


கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.