அரச ஊழியர்களுக்கு சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு இதை இனி கட்டாயமாக்குங்கள்

 

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளார்.


மின்சாரம் மற்றும் எரிபொருளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, அனைத்து அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலும் உள்ள குளிரூட்டிகள் மாலை 3 மணிக்குப் பின்னர் அணைக்கப்பட வேண்டும்.


தனியார் துறையினரும் இதேபோன்ற மின்சாரச் சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர். ஒளிரும் விளம்பரப் பலகைகள் மற்றும் திரைகளை இரவு 8 மணிக்குப் பின்னர் அணைத்து வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


அத்துடன், வீதி விளக்குகளை இரவு 6 மணி முதல் 10 மணி வரை அணைத்து வைப்பதற்கான விசேட திட்டங்களை உள்ளூராட்சி மன்றங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

100-க்கும் மேற்பட்டோர் பங்குபற்றும் பெரிய அளவிலான விழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளின் போது, தேசிய மின் கட்டமைப்பிலிருந்து மின்சாரத்தைப் பெறுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இத்தகைய நிகழ்வுகளுக்கு மாற்று வழிகள் மூலம் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது. தற்போதைய இக்கட்டான சூழலில் மின்சாரக் கட்டமைப்பின் சமநிலையைப் பேணுவதற்கு இந்த நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


புத்தம் புதிது
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post