சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று(21) மீண்டும் சரிவைக் கண்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நான்காயிரத்து 494 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் தங்கத்தின் விலை ஐயாயிரம் டொலர்களுக்கு மேல்
கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஐயாயிரம் டொலர்களுக்கு மேல் விறபனையாகியிருந்த நிலையில், இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் வெள்ளியின் விலையும் சரிவடைந்து, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 68.02 டொலராக விற்பனையாகிறது.
இது, நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் சுமார் 2.23 சதவீத வரையிலான சரிவாகும்.
அமெரிக்க டொலரின் பெறுமதி சர்வதேச சந்தையில் வலுவடைந்து வருவது மற்றும் பணவீக்கம் தொடர்பான கவலைகள் தங்கத்தின் விலையில் இந்த சரிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இலங்கையிலும் , இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
