யாழ்ப்பாணம் – வடமராட்சியில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மட்டுமே இன்று (02.03.2026) எரிபொருள் விநியோகம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பருத்தித்துறை துறைமுகம் அருகாமையில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிரப்பும் நிலையம் இரவு பகலாக எரிபொருளை விநியோகித்து வருகிறது.
ஏனைய குன்சர் கடை, நெல்லியடி, மந்திகை, வல்வெட்டித்துறை, கிராமகோடு ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இதனால், மக்கள் தங்கள் வாகனங்களை வரிசையில் நிறுத்தி நீண்ட நேரமாக காத்திருந்து எரிபொருள் நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
