இலங்கையில் இன்றைய தினம் தங்க விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்றைய விற்பனை விலையிலேயே இன்றும் தங்கம் விற்பனை செய்யப்படுகின்றது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 408,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 375,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,913 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
