இலங்கையில் , நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சியில் பதிவாகியுள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 24 கரட் தங்கம் ஒரு பவுன் தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் குறைந்து 24 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 410,000 ரூபாவாகும்.
நேற்றைய தினம் 381,000 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் தங்கம் ஒரு பவுன் 1,800 ரூபாவினால் குறைந்து , 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 379,200 ரூபாவாகும்.
அதேவேளை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இன்றைய தினம் உள்நாட்டு தங்கச் சந்தையில் விலை வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
