அதிநவீன போர் விமானங்களுடன் ஈரான் நோக்கி விரையும் அமெரிக்காவின் பிரமாண்ட கப்பல் ; அதிகரிக்கும் பதற்றம்

 

மேற்காசியாவில் போர் பதற்றம் நிலவும் சூழலில், அமெரிக்காவின், 'யு.எஸ்.எஸ்., திரிபோலி' என்ற பிரமாண்ட போர்க்கப்பல், 2,000க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுடன் ஈரானை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.


மேற்காசிய நாடான ஈரானுடன், அமெரிக்காவும், இஸ்ரேலும் சண்டையிட்டு வருகின்றன. உலகின், 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும், 'ஹார்முஸ் ஜலசந்தி'யை ஈரான் மூடி உள்ளது.

அதிநவீன போர் விமானங்கள்


இதனால், கச்சா எண்ணெய் உட்பட பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், அமெரிக்காவின் பிரமாண்ட போர்க்கப்பலான யு.எஸ்.எஸ்., திரிபோலி, 2,000க்கும் மேற்பட்ட வீரர்களுடன் ஈரானை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.


ஜப்பானின் ஒகினாவாவை தளமாகக் கொண்ட, 31வது படைப்பிரிவு வீரர்கள் இக்கப்பலில் உள்ளனர். இவர்கள், வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை உடனடியாக துவங்கக்கூடிய வல்லமை படைத்தவர்கள்.


கடந்த 15ல், சீன கடற்பகுதியில் காணப்பட்ட இக்கப்பல், விரைவில் அரபிக் கடலை அடையும் என, கூறப்படுகிறது. இக்கப்பலில் அதிநவீன போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளன.

இதுவரை வான்வழி தாக்குதலை நடத்திய அமெரிக்கா, தற்போது தரைப்படை வீரர்களை அனுப்புவது, போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடக்கும் கார்க் தீவை கைப்பற்றக்கூடும். ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து முட்டுக்கட்டையை தகர்த்து, உலகளாவிய எண்ணெய் வினியோகத்தை சீரமைக்கவும் அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post