யாழில் மாணவிகளுக்கு மாணவன் செய்த மோசமான செயல் ; நியாயம் கேட்டவர்களை துரத்தி துரத்தி வெட்டிய தந்தை

 

சமூக ஊடகம் ஒன்றில் பாடசாலை மாணவிகளை அவதூறு செய்த பாடசாலை மாணவன் ஒருவரை 14 நாள்கள் சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் தடுத்துவைக்க ஊர்காவற்றுறை நிதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


அத்துடன் குறித்த அவதூறு பரப்பியதை நியாயம் கேட்கச் சென்ற பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர் ஒருவரை கூரிய ஆயுதமொன்றால் வெட்டிக் காயப்படுத்திய குற்றத்துக்காக குறித்த மாணவனின் தந்தையாரையும் 14 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது

அவதூறு

சில வாரங்களுக்கு முன்னர் வேலணைப் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவன் ஒருவர் மாணவி ஒருவரது புகைப்படம் மற்றும் இன்னொரு மணவியின் தாயாரது தொலைபேசி இலக்கத்தையும் "ரிக்ரொக்" சமூக ஊடகத்தில் கீழ்த்தரமான பாலியல் ரீதியான வாசகங்களுடன் பதிவிட்டு அவதூறு பரப்பியிருந்ததாக கூறப்படுகின்றது.


இந்நிலையில் குறித்த அவதூறால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரது உறவினர்கள் அவதூறு பரப்பியவரின் வீடிற்குச் சென்று குறித்த மாணவனிடம் இது தொடர்பில் வினவியுள்ளனர். இதன்போது அவதூறு பரப்பிய மாணவனின் தந்தையார் நியாயம் கேட்கச் சென்ற ஒருவரை கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கி காயப்படுத்தால் குறித்த நபர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்.


இவ்வாறான பின்னணியில் ஊர்காவற்றுறை சிறுகுற்றப் பிரிவு பொலிசில் இரு மாணவிகளின் பொற்றோரும் முறைப்பாடு செய்திருந்தனர்.


குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுத்த ஊர்காவற்றுறை சிறுகுற்றப் பிரிவு பொலிசார் இருவரையும் நேற்றையதினம் (17) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.


இந்நிலையில் மாணவனை சிறுவர் சீர்திருத்த மையத்தில் 14 நாள்களும், மாணவனின் தந்தையை 14 நாள்களும் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிடிருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post