பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் சூட்சுமமான முறையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
பேலியகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, செவ்வாய்க்கிழமை (17) இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, குறித்த விடுதியை நிர்வகித்து வந்த பெண் ஒருவரும், அங்கு விபச்சார நடவடிக்கைகளுக்காகத் தங்கியிருந்த மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட பெண்கள் 49 மற்றும் 51 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஓப்பநாயக்க மற்றும் ஹெய்யந்துடுவ ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
