கடையில் பணிமுடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் விபத்தில் சிக்கி பலி - கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லைத்தீவு A35 வீதியில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று நடந்த விபத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு 03-04-2026 , கிளிநொச்சி பரந்தன் 10 ம் வீதியால் சென்றுகொண்டிருந்த மோட்டர் கிரேண்டர் வாகனத்தின்மீது பின்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குறித்த விபத்தில் கடையொன்றில் பணி முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி பயணித்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் பலியானோர் கிளிநொச்சியை சேர்ந்த ஜெரின் கனிஸ்ரன் (வயது 19) , தியாகராசா விக்கினேஸ்வரன் ( வயது 18) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.



