பல்கலைகழக மாணவன் உயிரிழப்பு-சற்று முன் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

 


ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், அதே பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குறித்த பல்கலைக்கழகத்தினால் நேற்று (9) சித்திரை புத்தாண்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் புத்தாண்டு விழாவின் அனைத்து நடவடிக்கைகளும் மாலை 6 மணியளவில் நிறைவடைந்துள்ளன. எவ்வாறாயினும், அதன் பின்னர் அதே பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இரவில் தனியார் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அந்த விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளதுடன், அவர் பின்னால் ஒரு மாணவனும் சென்றுள்ளார். அதைக் கண்ட அந்த மாணவியின் நண்பர் (உயிரிழந்த மாணவர்), அவளுக்குப் பின்னால் சென்ற மாணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அந்த நேரத்தில், தாக்குதலுக்குள்ளான மாணவனின் நண்பர்கள் குழுவொன்று, தாக்குதல் நடத்திய மாணவரை கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த மாணவரை ஹோட்டல் ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அந்த நேரத்திலேயே குறித்த மாணவர் உயிரிழந்திருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது வரை 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் நிக்கதலுபொத்த, வெல்லவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் ஆவார். சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post