சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (23.04.2026) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,734.42 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 77.69 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது. கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 396000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 364300 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
