இலங்கையில் ஆயிரக்கணக்கான அரச நிறுவன ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி


அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி அரச நிறுவனங்களில் தற்காலிக, பதிலீடு, ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் சுமார் 9800 ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பல்வேறு அரச திணக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் நீண்டகாலமாக நிரந்தர நியமனங்கள் இன்றி பணியாற்றி வந்த சுமார் 9800 ஊழியர்களுக்கு இதன் மூலம் நிவாரணம் கிடைக்கவுள்ளது.இதுவரை காலமும் தினக்கூலி அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றியவர்கள் இந்த புதிய நடைமுறையின் கீழ் நிரந்தர சேவையில் உள்வாங்கப்படவுள்ளனர்.இந்த ஊழியர்களை நிரந்தரமாக்கும் செயற்பாடுகளை முறைப்படுத்துவதற்காக, உரிய அரச நிருவாக சுற்றுநிருபத்தை உடனடியாக வெளியிடுவதற்கு அமைச்சரவை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

நீண்டகாலமாக தொழில் பாதுகாப்பு இன்றி பணியாற்றி வந்த இந்த ஊழியர்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post