நீடிக்கப்பட மாட்டாது - உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர அறிவிப்பு

 

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று (24) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே இதுவரை உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்பிக்காத பரீட்சார்த்திகள் உடனடியாக அதனை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.இதற்கான விண்ணப்பங்ளை தற்போது நிகழ்நிலை ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பிக்க முடியாது என பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.அதேநேரம் உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரலுக்கான காலப்பகுதியானது எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர் 0112785922, 0112784208 மற்றும் 0112784537 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ அல்லது gcealexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ பரீட்சைத் திணைக்களத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post