ஈரான் மீதான போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை முற்றுகை காரணமாக உலகளாவிய ரீதியில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் கவலை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் சர்வதேச சட்டங்களுக்கு இணங்க ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மீண்டும் திறப்பதே தங்களது முதன்மை இலக்கு என்று குறிப்பிட்டார்.
எவ்விதக் கட்டணங்களும் இன்றி சுதந்திரமான கடல் போக்குவரத்தை உறுதி செய்வதன் மூலமே உலகளாவிய எரிசக்தி விநியோகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்தப் போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குத் நீடித்தால், உலகம் கடுமையான எரிசக்தி பற்றாக்குறையைச் சந்திக்கும் என்று டோட்டல் எனர்ஜிஸ் (TotalEnergies) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பேட்ரிக் புயான் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து மேக்ரோன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டிருப்பது ஆசிய நாடுகளை ஏற்கனவே பாதித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையால் ஏற்படும் பீதி நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
