இஷாரா செவ்வந்தியின் வங்கி கணக்குகள்; நீதிமன்றம் உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் இஷாரா செவ்வந்தியின் வங்கி கணக்குகள் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம இன்று (21) உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு நீதிம்ன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்தக் கொலைச் முயற்சி தொடர்பான 15ஆவது சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, தனியார் வங்கி ஒன்றில் கணக்கைப் பராமரித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி கோரிய நிலையிலேயே, சந்தேகநபர் மற்றும் அவரது வங்கி கணக்குகள் குறித்து முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மற்றும் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


புத்தம் புதிது
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post