விஜய் நடித்த ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில் திடீரென முழு படமும் இணையத்தில் பைரஸி தளங்களில் லீக் ஆனது. அது பற்றி தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரை தொடர்ந்து சைபர் க்ரைம் பொலிஸார் 6 பேரை கைது செய்து இருக்கின்றனர். படம் லீக் ஆனது எப்படி என்ற கேள்விக்கு பதில் தெரியாத நிலையில் அது பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் சோமனூர் மற்றும் கருமத்தம்பட்டி போன்ற இடங்களில் ஒளிபரப்பாகி வரும் ராசி என்ற லோக்கல் கேபிள் சேனலில் ஜனநாயகன் படம் ஒளிபரப்பாகி இருக்கிறது. சட்டவிரோதமாக லீக் ஆன படத்தை ஒளிபரப்பிய சேனல் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்து உரிமையாளரை கைது செய்தனர். மேலும் சேனல் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
