விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட புதன்கிழமையை மீண்டும் வேலை நாளாக மாற்றுவதற்கும் QR முறைமை மற்றும் ஒற்றை - இரட்டை இலக்க முறைமைகளை நீக்கி நிலைமையை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க முடியும் என அரச தரப்பு அறிவித்துள்ளது. மாத்தறையில் நேற்று (05) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர்ச் சூழலால் உருவான எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் தற்போது வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்துள்ளதாக அவர் இதனைக் குறிப்பிட்டார். இஸ்ரேலின் ஹைஃபா நகரை நேரடியாக தாக்கிய ஈரானிய ஏவுகணை இஸ்ரேலின் ஹைஃபா நகரை நேரடியாக தாக்கிய ஈரானிய ஏவுகணை எரிபொருள் வரிசைகள் நாங்கள் ஏற்கனவே புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தினோம். ஆரம்பத்தில் ஓரிரு வாரங்கள் சிரமங்கள் இருந்தன, வரிசைகள் உருவானது உண்மைதான். நாங்கள் ஏற்கனவே புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தினோம். ஆரம்பத்தில் ஓரிரு வாரங்கள் சிரமங்கள் இருந்தன, வரிசைகள் உருவானது உண்மைதான். இதனால் உடனடி நடவடிக்கையாக QR முறைமை மற்றும் ஒற்றை-இரட்டை இலக்க விநியோக முறையை அறிமுகப்படுத்தினோம். புதன்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்தோம். தற்போது வரிசைகளை இல்லாமல் செய்துள்ளோம். QR மற்றும் ஒற்றை-இரட்டை முறைமைகள் தற்போது சிறப்பாகச் செயற்படுகின்றன. இன்னும் சில நாட்களில் அந்த முறைகள் தேவையில்லை என்றால், அவற்றை நீக்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
