உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டு 4780 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை நேற்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கம் 4695.96 டொலர்களாக பதிவாகியிருந்தது. அத்துடன் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் அதிகரித்து 75.4 டொலராக பதிவாகியுள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 403,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,350ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
