விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி-வங்கிகளுக்கு வரும் பணம் இவ்வளவா?

 

 

நாட்டிலுள்ள விவசாயிகளுக்கான விசேட நிவாரணத் திட்டத்தின் கீழ், நெற்பயிர் மற்றும் ஏனைய பயிர்களுக்கான உர மானியத்தை கணிசமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (07) விசேட உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, நெல்லுக்கான உர மானியம் 25,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். ஏனைய பயிர்ச்செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கான மானியம் 15,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். பழைய விலையில் கொள்வனவு செய்யப்பட்ட பெருமளவிலான யூரியா உரக் கையிருப்பு உள்ளதாகவும், இதன் மூலம் விவசாயிகளுக்கு எவ்விதத் தடையுமின்றி உரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post