சென்னையில் இலங்கையை பின்புலமாக கொண்ட பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையைப் பூர்வீமாகக் கொண்டவரும், தற்போது இந்திய சீரியல், சினிமா மற்றும் விளம்பரத் துறைகளில் செயற்பட்டு வந்தவருமான, ஷாஸ்வி பாலா என்றழைக்கப்படும் சுபாஷினி பாலசுப்ரமணியத்தின் தீடீர் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுபாஷினி. இவர் சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இலங்கையை பின்புலமாக கொண்ட நடிகை சுபாஷினி பெங்களூரில் தனது கணவர் பிப்பின் என்பவருடன் வசித்து வந்த நிலையில் படப்பிடிப்புகள் காரணமாக போரூரில் தங்கி வந்தார்.சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை சுபாஷினி , நேற்று இரவு தனது கணவருடன் வீடியோ கால் பேசிய போது ஏற்பட்ட தகராறு காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுபாஷினியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகையின் விபரீத முடிவால் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
