ஆசிரியருடன் கள்ள தொடர்பு; வதந்தியால் உயிரை விட்ட மாணவி

இந்தியாவின் கர்நாடகாவில் பேராசிரியருடன் கள்ள உறவு வைத்திருப்பதாகப் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டதால் மாணவி தற்கொலை செய்துகொண்ட அவல சம்பவம் அரங்கேறி உள்ளமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, சித்ரதுர்கா மாவட்டம், ஹோலல்கெரே நகரைச் சேர்ந்த 23 வயதான லிகிதா, மல்லாடிஹள்ளியில் உள்ள ஆயுர்வேதக் கல்லூரியில் பி.ஏ.எம்.எஸ் படித்து வந்தார்.கல்லூரியில் பேராசிரியர் ராஜு உடன் ஆசிரியர் என்ற முறையில் லிகிதா பழகி வந்துள்ளார். ஆனால் அவருடன் லிகிதாவுக்கு தகாத உறவு இருப்பதாக சக மாணவிகள் வதந்திகளை பரப்பி உள்ளனர்.அன்றாடம் லிகிதா இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார். அதை பெரிது படுத்தவேண்டாம் என பெற்றோர் கூறியும் லிகிதனால் சக மாணவிகள் ஏற்படுத்திய அவப்பெயரை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்த சூழலில் நேற்று (02) தனது இல்லத்தில் லிகிதா தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்த கடிதத்தில், தன்னை மன ரீதியாக துன்புறுத்திய சக மாணவிகள் பெயரை லிகிதா எழுதி வைத்துள்ளார்.

இந்நிலையில் மாணவியின் தற்கொலைக் கடிதத்தின் அடிப்படையில் பேராசிரியர் ராஜு மற்றும் தொடர்புடைய மாணவிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post