சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம் ; பண மழை கொட்டப்போகும் ராசிக்காரர்கள்

 

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கங்கள் மற்றும் அவற்றால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் நவகிரகங்களின் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் தான் சுக்கிரன்.இந்த சுக்கிரன் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் ஏப்ரல் 19 ஆம் திகதி தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் மிகவும் மங்களகரமான யோகமான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. 

இப்போது சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை பார்க்கலாம்.

மேஷம் மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் வசதிகளைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறலாம். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகள் குவியும்.

 ரிஷபம் ரிஷப ராசியின் முதல் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை உயரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். ஆரோக்கியம் மேம்படும். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் கருத்தை திறம்பட வெளிப்படுத்துவீர்கள். இதனால் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

 சிம்மம் சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சிலருக்கு பெயரும் புகழும் கிடைக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். சமூக அந்தஸ்து உயரும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வருமானத்திலும் உயர்வு ஏற்படலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகள் வலுபெறும்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post