பல்கலைகழக விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை-சற்று மூன் வெளியான அறிவிப்பு

Nila

 

பல்கலைக்கழக விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகும் சமீபத்தில் வெளியாகி இருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலை (Online) மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க மூன்று வார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக அனுமதி தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய கைநூல் (Handbook) இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.