பண்டிகைக் காலம் காரணமாக, இன்று (11) முதல் 18ஆம் திகதி வரை வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் 'QR' முறை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா, புத்தாண்டு காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இருப்பினும், ஒற்றை மற்றும் இரட்டை எண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.
