மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் தண்ணீர்த் தொட்டியிலிருந்து 11 வயதான சிறுமி ஒருவர் உடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் சகோதரன், சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நீதவானின் உத்தரவுக்கு அமைய, 14 வயது சிறுவன் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர், சூரியன் செய்திச் சேவைக்கு குறிப்பிட்டனர்.
உயிரிழந்த சிறுமிக்கும், அவரின் சகோதரனுக்கும் கையடக்க தொலைபேசி காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், வீட்டுக் குளியலறையின் தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த நிலையில், சிறுமியின் உடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், சிறுமி தனது தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
