திருமண வாழ்வில் துணையை ஏமாற்றும் டாப் 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!

 



ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் ஆழ்ந்த தாக்கத்தை கொண்டிருக்கும் என்று நம்பப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயற்கையாகவே பெண்கள் மற்றும் காதல் விவகாங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் காதல் என்ற பெயரில் ஏமாற்றுவதில் கில்லாடிகளாகவும் இருப்பார்களாம்.

அப்படி காதல் வலையில் சிக்கவைத்து பெண்களை அதிகம் ஏமாற்றும் குணம் கொண்ட ஆண் ராசியினர் யார் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

இந்த ராசி ஆண்கள் எந்தவொரு உறவிலும் அரிதாகவே திருப்தி அடைகின்றார்கள்.இவர்களின் இந்த குணம் பல பெண்களிடமும் காதல்வயப்பட முக்கிய காரணமாக இருக்கின்றது.

அவர்கள் அடிப்படையிலேயே உற்சாகமும், சாகசமும் நிறைந்திருக்கும் இவர்கள் எப்போதும் வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்ற மனப்பாங்கு கொண்டவர்களாக இருப்பார்கள்.

காதல் உறவாக இருந்தாலும் சரி, உடல்ரீதியான நெருக்கமாக இருந்தாலும் சரி அவர்கள் எப்போதும் எளிதில் சலிப்படையும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்த ஆண்கள் எப்போதும் கவனத்தின் மையப் புள்ளியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். அதாவது இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் ராஜாவாக இருக்க வேண்டும்.

அவர்கள் இயல்பாகவே பெண்களை ஈர்க்கும் வசீகர தோற்றத்தையும் காந்த பார்வையும் கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள்.

இந்த ராசி ஆண்களிடம் காணப்படும் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற குணம் பல பெண்களுடன் காதலில் விழுவதற்கும் அவர்களை ஏமாற்றுவதற்கும் காரணமாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசியில் பிறந்த ஆண்கள் மற்ற ராசியினருடன் ஒப்பிடுகையில், அதிகம் காதல் மற்றும் காம உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசி ஆண்கள் தங்கள் உறவுகளில் எப்போதும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை விரும்புகிறார்கள்.அதனால் வேறு பெண்களுடன் பலகினாலும் அதை தங்களின் துணைக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு கில்லாடிகளாக இருப்பார்கள்.

மற்ற பெண்களை நாடுவதற்கும் ஏமாற்றுவதற்கும் இவர்களின் சுயநலமான குணம் முக்கிய காரணமாக அமையலாம். இவர்கள் எளிதில் சலிப்படையும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post