குரு - செவ்வாய் கொடுக்கும் கோடி பலன் - நான்கு ராசிகளுக்கு உச்சம்!

 

குரு மற்றும் செவ்வாய்யின் சேர்க்கை குறிப்பிட்ட ராசிகளுக்கு பணம், கல்வி, செவ்வம், தொழில் என அனைத்தையும் அள்ளிக்கொடுக்கப்போகிறது. 

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சியும் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. இதனால் பல ராசிகள் தங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை சந்திக்கலாம். 

ஜோதிட குறிப்பின்படி செவ்வாய் மற்றும் குரு ஒன்றுக்கொன்று 60 டிகிரி கோணத்தில் சந்திக்கிறது. இதனை ஜோதிட ரீதியாக லாப பார்வை ராஜயோகம் என குறிப்பிடுகின்றனர். 

ஜூன் 28 அன்று செவ்வாய் மற்றும் குரு கிரகங்களின் இந்த சந்திப்பு 12 ராசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளின் வாழ்க்கையில் ராஜயோகத்தை அள்ளி கொடுக்கப்போகழன்றது. மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால் குருவுடன் சேர்க்கை மிக அமோக பலனை தரும். பொருளாதார ரீதியாக நனமை கிடைக்கும். நீண்ட தூர பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டத்தால் வெற்றி கிடைக்கும். புது சொத்து வாகனம் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் கிடைக்கும். தொழில் தொடங்க இது நல்ல நேரம். 

மிதுனம்

குரு மற்றும் செவ்வாய்யின் சேர்க்கை மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான காலகட்டத்தை கொடுக்க இருக்கிறது. தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். இந்த காலகட்டத்தில் பெரிய வாய்ப்புகள் வரக்கூடும். சமூகத்தில் இருக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும். அதேபோல், போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

சிம்மம்

குரு மற்றும் செவ்வாய்யின் சேர்க்கை லாப பார்வை ராஜயோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகம் உங்கள் படைப்பாற்றலை அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கலாம். காதல் உறவுகள் மேலும் வலுப்படும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும் வாய்ப்புள்ளது. 

தனுசு

குரு செவ்வாயின் சேர்க்கை உங்களை உற்சாகத்துடனும் துணிச்சலுடனும் செயல்பட வைக்கும். விளையாட்டு வீரர்கள் அல்லது ராணுவம், காவல் போன்ற துறைகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு இது நல்ல காலம் ஆகும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் முதலீடு செய்யலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களால் படிப்பில் சிறந்து விளங்க முடியும்.



இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post