தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள கரிசல் பகுதியில் இன்று காலை பேருந்து ஒன்று பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பனை மரம் ஒன்றுடன் பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்து இடம்பெற்றபோது, குறித்த பேருந்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடமைக்காகச் சென்று கொண்டிருந்த தொழிலாளர்களே இருந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த 9 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpeg)