பொலிஸாரின் அதிரடி அறிவிப்பு



 மே மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் மோட்டார் வாகனக் காப்பீட்டு அட்டைகளை வழங்குவது தொடர்பாக பொலிஸாரால் விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கை காப்புறுதி சங்கம் மற்றும் காப்புறுதித் துறையின் ஏனைய பங்குதாரர்கள் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய, காப்புறுதி நிறுவனங்களால் காப்புறுதிச் சான்றிதழ்களுக்குப் பதிலாக இவ்வாறு டிஜிட்டல் மோட்டார் வாகனக் காப்பீட்டு அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, 'தேசிய காப்புறுதிச் சரிபார்ப்பு அமைப்பு' (National Insurance Verification System) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதனைப் பின்வரும் முறைகள் மூலம் அணுக முடியும். இதன் மூலம் மோட்டார் வாகனக் காப்புறுதியின் செல்லுபடியாகும் தன்மையைச் சரிபார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது:

USSD குறியீடு: 1338# ஊடாகப் பின்வரும் படிகளைப் பின்பற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது:



ஏதேனும் ஒரு மொபைல் தொலைபேசி இணைப்பு மூலம் *1338# என்ற எண்ணை அழைத்தல்.



வாகன இலக்கம் அல்லது காப்புறுதிச் சான்றிதழ் இலக்கத்தை உள்ளீடு செய்தல்.



தொடர்புடைய காப்புறுதிப் பத்திரத்தின் தற்போதைய நிலையை உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ii). SMS: 1338 குறுஞ்செய்தி சேவை:

காப்புறுதி நிறுவனங்களால் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை வழங்குவது ஆரம்பிக்கப்பட்ட போதிலும், தற்காலிக காப்புறுதி ஆவணங்களை வழங்குவது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.



எதிர்காலத்தில் தற்காலிக காப்புறுதி ஆவணங்களை வழங்குவதை நிறுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், அதுவரை தற்காலிக காப்புறுதி ஆவணங்கள் முன்னரைப் போலவே செல்லுபடியாகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மே 01 ஆம் திகதி முதல் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள் மாத்திரம் வழங்கப்பட்டாலும், இதுவரையில் வழங்கப்பட்டுள்ள காப்புறுதி அட்டைகள் அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை செல்லுபடியாகும்.

ஏதேனும் ஒரு சாரதியால் டிஜிட்டல் காப்பீட்டு அட்டையைச் சமர்ப்பிக்க முடியாத சந்தர்ப்பத்தில், டிஜிட்டல் காப்புறுதி அட்டையின் அச்சிடப்பட்ட நிழற்படப் பிரதியைச் சமர்ப்பிக்கும் போது, குறுகிய தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தியோ அல்லது குறுஞ்செய்திச் சேவை மூலமோ அந்தப் பாதுகாப்பின் செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.



2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் II ஆம் அத்தியாயத்தின் 3 ஆம் பிரிவின்படி, இந்த டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை ஏற்றுக்கொள்வது, அதன் தாக்கம் அல்லது செல்லுபடியாகும் தன்மையை இழக்கச் செய்ய முடியாது.



இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post