வாகன இறக்குமதிக்காக காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

 

தனியார் மற்றும் வர்த்தக வாகனங்கள் உட்பட மார்ச் மாதத்தில் இலங்கை 195 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை 613 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வாகன இறக்குமதி செலவினம் 900 சதவீதம் அதிகரித்திருந்தாலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் வாகன இறக்குமதி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், ஏப்ரல் மாதம் முதல் நாட்டிற்கான வாகன இறக்குமதி படிப்படியாக அதிகரித்து, ஆண்டின் இறுதியில் மொத்த வாகன இறக்குமதி செலவினம் 2.047 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்துள்ளது.




இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post