கல்வி பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் குறித்து வெளியான அறிவிப்பு

 

2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூன் மாதத்தின் நடுப்பகுதிக்குள் வெளிவர வாய்ப்புள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் சூரியன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெற்றது.

இந்த நிலையில் குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக கடந்த வாரம் முதல் சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

எனினும், 2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதி அல்லது ஜுன் மாத நடுப்பகுதிக்குள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், போலிய செய்திகளினால் பரீட்சார்த்திகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகுவதால், அவ்வாறான செய்திகளை பரப்புவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் சூரியன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post