மதுபான உற்பத்திகளுக்கான பாதுகாப்பு முத்திரைகளை அச்சிடும் விலைமனுவை , சர்வதேச அனுபவமோ அல்லது தகுதியோ இல்லாத நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கு நிதி அமைச்சு தயாராகி வருவதாக மதுவரித் திணைக்களத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பாதுகாப்பு முத்திரைகளை அச்சிடுவதற்கான விலைமனு நடைமுறைகளை ஆரம்பிப்பதற்கு கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
