சிறிலங்கா வங்கிகளின் அதிர்ச்சிகள்! அச்சத்தில் வெளிநாட்டு இலங்கையர் நிலை

 



இலங்கையை கடந்த நவம்பரில் புரட்டிப்போட்ட தித்வா சூறாவளி தாக்கம் இன்னும் அகலாத நிலையில் தற்போதைய கோடை மழையும் அந்த தீவை விட்டு வைப்பதாக தெரியவில்லை.

இலங்கை தனது பொருளாதார மீட்சியில் சாண்ஏற இவ்வாறான இயற்கைத்தாக்கங்களாவ் முழம் சறுக்கிகொள்கின்றது. இதனால் வேறுவழியின்றி இலங்கைக்கு உதவும் தனது உறுதிப்பாட்டை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் நேற்று வெளிப்படுத்தியது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு இந்த சாதக செய்தியை வழங்கினாலும் சிறிலங்காவின் வங்கித் துறை, முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு மிகக்கடுமையான அவநம்பிக்கை நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளது.

அங்கு அரசியல் அதிகாரமுகங்களில் வேருன்றிய ஊழல் முறைகேடுகள் இப்போது வங்கித்துறையையும் தாக்கி அதன் மூத்த அதிகாரிகள் பல ஆண்டுகளாக போலியான கடன் ஆவணங்களைப் தயாரித்து வாடிக்கையாளர் பதிவேடுகளைத் திரித்து கோடிக்கணக்கான ரூபாய்களை அமுக்கிய விடயங்கள் அம்பலமாகியுள்ளன.


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post