மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில், நேற்று(02) அதிகாலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் திக்கோடை,சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
அதிகாலை தனது வீட்டு வளவிற்குள் நின்றபோது, காட்டு யானை திடீரெனத் தாக்கியுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
