யாழ்ப்பாணத்தில் காவல்துறை விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் ஒருவர், காவல் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை ஒன்றிற்காக நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாண தலைமை காவல் நிலையம் வருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி அவர் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்த வேளையில், திடீரென மயங்கி விழுந்ததாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரை உடனடியாக மீட்டு யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவரின் உடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற
.jpeg)