நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்த சுமார் 115,000 மெட்ரிக் டொன் நெல், தற்போது சபையின் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சிறுபோகத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான களஞ்சிய வசதிகள் மற்றும் நிதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், குறித்த நெல் இருப்பில் போதுமான பாதுகாப்பு இருப்பை மாத்திரம் வைத்துக்கொண்டு, ஏனைய பகுதியை விற்பனை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, முறையான விலை மனு கோரல் நடைமுறையைப் பின்பற்றி அந்த நெல் இருப்புகளை விற்பனை செய்வதற்காக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
.jpeg)