வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு



இலங்கையில் 2026ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக, ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகளவிலான அந்நியச்செலாவணி செலவிடப்பட வாய்ப்புள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர், கடந்த ஆண்டில் வாகன இறக்குமதிக்காக முன்னதாகக் கணிக்கப்பட்ட 1.5 பில்லியன் முதல் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை விடவும் அதிகமாக, தலா 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாறான அதிகளவிலான இறக்குமதி காரணமாக, வாகன இறக்குமதி வரி மற்றும் தீர்வுகள் மூலம் திறைசேரிக்குக் கிடைக்கும் வருவாயும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நிலவும் இதே போக்கு இந்த ஆண்டன் எஞ்சிய மாதங்களிலும் தொடருமானால், 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் மொத்த வாகன இறக்குமதிச் செலவு தோராயமாக 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டக்கூடும் என ஆளுநர் எச்சரித்துள்ளார்.

இது கடந்த ஆண்டின் ஒட்டுமொத்த செலவினத்தையும் விட அதிகமாகும்.

நிதி அமைச்சானது கடந்த ஆண்டை விடவும் 2026இல் வாகன இறக்குமதி குறையும் என்றே கணித்திருந்தது.

எனினும் தற்போதைய தரவுகள் அந்த எதிர்பார்ப்புகளையும் தாண்டி இறக்குமதி அதிகரிக்கலாம் என்பதைக் காட்டுவதாக நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த வாகன இறக்குமதி அதிகரிப்பானது அரசாங்கத்தின் வருவாய் இலக்குகளில் எந்தவொரு எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதற்கான அறிகுறி எதுவும் தற்போது வரை இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.



قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post