தோட்டத் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேதன உயர்வு, எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஐபென் நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, நேற்று (12) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையில் கைத்தொழில் அமைச்சு, தொழில் திணைக்களம், சம்பள நிர்ணய சபை மற்றும் திறைசேரி ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு தமது தரப்பு விளக்கங்களை முன்வைத்தனர்.
தற்போது பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருவதாகவும், ஏனையோருக்கு வழங்குவது குறித்து இதுவரை எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டுமே சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருவதாகவும், ஏனையோருக்கு வழங்குவது குறித்து இதுவரை எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெருந்தோட்டத்துறையில் மொத்தம் 1 இலட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ள போதிலும், 80 ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 40 ஆயிரம் பதிவு செய்யப்படாத தொழிலாளர்களுக்கு வேதன உயர்வு வழங்கப்படவில்லை என்பதை அமைச்சின் மேலதிக செயலாளர் உறுதிப்படுத்தினார்.
பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்களுக்கு தற்போதைய சம்பளம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பது குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மனித உரிமைகள் ஆணைக்குழு, இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் தங்களது இறுதி நிலைப்பாடுகள் மற்றும் அதற்கான நியாயப்படுத்தல்களை அடுத்த அமர்விற்கு முன்னதாக எழுத்து மூலம் சமர்ப்பிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் வரை தமது சட்டப் போராட்டமும் தார்மீகப் போராட்டமும் தொடரும் என ஐபென் நிறுவனம் தெரிவித்துள்ளது.
.jpg)