பொதுவாகவே எல்லா குழுக்களிலும் ஒரு நபராவது எல்லாவற்றையும் எதிர்மறையாகவே சிந்திக்கும் தன்மை கொண்டவராக இருப்பார்.
இவர்களிடம் எந்த விடயத்தை பகிர்ந்தாலும் அதில் நடக்க்கூடிய எல்லா கெட்டதையும் சொல்லி நமது மனநிலையையும் சேர்த்து கெடுத்துவிடுவார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி பெரும்பாலும், எப்போதும் எதிர்மறை விடயங்களை பற்றியே சிந்திக்க்கூடிய ராசியினர் யார் யார் என்பது குறித்தும் இவர்களின் தனித்துவ குணங்கள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
அன்பின் கிரகமாக சுக்கிரனால் ஆளப்படும் கடக ராசியினர் இயல்பாகவே மென்மையான குணத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இயல்பாகவே நேர்மறை எண்ணங்களை விடவும் எதிர்மறையாக விடயங்கள் குறித்து அதிகம் சிந்திக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்
இவர்களின் பிரச்சினைகளை இவர்களிடம் வைத்துக்கொள்ளாமல் வாழ்வில் எப்போதோ நடந்த பழைய கதைகளை எல்லாம் பேசி மற்றவர்களின் மனநிலையையும் சேர்த்து குழப்பிவிடுவார்களாம்.
மகரம்
மகர ராசியினர் எப்போதும் தங்களின் வேலைகளை பற்றியே சிந்திக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தங்களின் திருமணத்தில் கூட தொழில் பற்றி தான் சிந்திப்பார்களாம். இவர்கள் ஒரு ஜாலியாக தருணத்தை கூட தங்களின் வேலையை பற்றியே பேசி மற்றவர்களின் முடையும் சுத்தமாக கெடுத்துவிடுவார்களாம்.
இவர்களிடம் ஒரு ஜோக் சொன்னால் கூட இதை தீவிரமாக ஆராய ஆரம்பித்துவிடுவார்கள். இந்த ராசியினரை கூட வைத்திருந்தால் மன அழுத்தம் வருவதை யாராலும் தடுக்கவே முடியாது.
கன்னி
இவர்களிடம் ஒரு விடயத்தை பற்றி பேசினால் அதில் இருக்கும் எல்லா நல்ல விடயங்களையும் விட்டுவி்ட்டு சிறிய குறைப்பாடை பற்றி தான் பெரிதாக பேசுவார்கள்.
இந்த ராசியினரின் குறை கண்டுப்பிடிக்கும் குணத்தால் இவர்களை விட இவர்கள் கூட இருப்பவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குறை கூறியே மற்றவர்களை மன அழுத்தத்தில் ஆழ்த்திவிடுவார்கள்.
