அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒருவருக்கு மாதம் ரூ. 17,117 தேவை: ஏப்ரல் மாத வறுமைக் கோட்டு விபரம் வெளியானது!

 


இலங்கையில் ஒரு தனி நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மாதமொன்றுக்குத் தேவைப்படும் குறைந்தபட்சச் செலவு 17,117 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களத்தினால் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிடப்பட்டுள்ள புதிய உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டு எல்லைக்கு அமைவாக இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதத்தில் வறுமைக் கோட்டின் குறைந்தபட்சச் செலவுத் தொகை 427 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் இந்த உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டு எல்லை 16,690 ரூபாவாகப் பதிவாகியிருந்தது.

ஒரு மனிதன் தனது அன்றாட அடிப்படைத் தேவைகளைச் (உணவு மற்றும் இதர தேவைகள்) பூர்த்தி செய்யத் தேவைப்படும் மிகக் குறைந்தபட்ச செலவின மதிப்பீடே இந்த வறுமைக் கோட்டின் மூலம் கணக்கிடப்படுகிறது.

திணைக்களத்தின் ஏப்ரல் மாத அறிக்கைக்கமைய, வழமை போல கொழும்பு மாவட்டத்திலேயே வறுமைக் கோட்டின் மதிப்பு மிக உயர்ந்த மட்டத்தில் பதிவாகியுள்ளது.

அங்கு ஒரு நபருக்குத் தனது அடிப்படைத் தேவைகளுக்காக மாதம் 18,461 ரூபா தேவைப்படுகிறது.

வறுமைக் கோட்டின்படி ஆகக்குறைந்த செலவு எல்லை மொனராகலை மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளது.

அங்கு ஒரு நபரின் அடிப்படைத் தேவைக்கான குறைந்தபட்ச செலவு 16,367 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post